புறாக்கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்

ரூ.34.50 லட்சம் இரண்டு வகுப்பறை கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சியில், புறாக்கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நபார்டு நிதியின் கீழ் 2024-25 நிதியாண்டில் ரூ.34 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் புவனராணி தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ.செங்குட்டுவன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து, கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய பொறியாளர் ரவிச்சந்திரன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிமுல் அன்சாரி, திமுக செயலக அணி மாவட்ட துணைத் தலைவர் விஜய கணபதி, புறாக்கிராமம் ஜமாத் தலைவர் முகமது நாசர் மற்றும் பள்ளி வேளாண்மை குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story