மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: தனியார் நிதி நிறுவன ஊழியர் கைது

X
தஞ்சாவூர் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியார் நிதி நிறுவன ஊழியரைக் காவல் துறையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர். தஞ்சாவூர் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சேர்ந்தவர் ஜெ.சண்முகராஜ் (42). தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர் திருவையாறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் கைப்பேசிக்காக வாங்கப்பட்ட கடன் தொகையை வசூல் செய்வதற்காக தொடர்புடைய வீட்டுக்கு கடந்த நவம்பர் மாதம் சென்றார். அப்போது, அந்த வீட்டில் இருந்த 18 வயதுடைய மாற்றுத்திறனாளியை சண்முகராஜ் மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்தாராம். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து சண்முகராஜை புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
Next Story

