தீ விபத்து

X
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஐயப்பன் நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அருகே உள்ள கோமதி டிரேடர்ஸ் என்ற பழைய இரும்பு கடையில் கெமிக்கல் பாய்லரை இரண்டாக உடைக்க முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக பாய்லர் தீப்பிடித்து எரிந்தது. மேலும் அங்கிருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்களும் தீயில் எறிந்து வருவதால் அந்த பகுதி முழுவதுமே புகை மூட்டமாக காணப்பட்டு வருகிறது. தொடர்ந்து பெருந்துறை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.ஏற்கனவே பெருந்துறை பகுதியில் பல்வேறு நிறுவனங்களால் ஏற்படும் மாசுபாடு காரணமாக சுவாசிக்கவே பொதுமக்கள் சிரமப்படுவதாக குற்றம் சுமத்தி வரும் நிலையில் இந்த தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகையின் காரணமாக பொதுமக்கள் சுவாசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story

