சாத்தூர் மகப்பேறு மருத்துவமனையை நள்ளிரவில் ஆய்வு செய்த ஆட்சியர்!

X
சாத்தூர் மகப்பேறு மருத்துவமனையை நள்ளிரவில் ஆய்வு செய்த ஆட்சியர்! மருத்துவர்கள் யாரும் பணியில் இன்றி மெயின் கதவு பூட்டால் பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி விரிவான விசாரணைக்கு உத்தரவு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சாத்தூர் தாலுகா அலுவலகம் அருகே செயல்படும் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் பணி நேரங்களில் மகப்பேறு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பதில்லை என பல்வேறு புகார்கள் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் நேற்று நள்ளிரவு அம்மருத்துவமனையை ஆய்வு செய்ய ஆட்சியர் சென்றபோது மருத்துவமனை பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்சியர், பின்னர் மருத்துவமனையின் உள்ளே சென்று ஆய்வு செய்த போது மகப்பேறு மருத்துவர் மற்றும் ஒரு சில செவிலியர்கள் பணி நேரங்களில் மருத்துவமனையில் இல்லாததால்,இன்று மாலைக்குள் மருத்துவ பணிகள் இணை இயக்குநர் விசாரணை நடத்தி, அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் முறை என்ன, அது எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது? ஏன் ஆண் பாதுகாப்பு அல்லது துணை ஊழியர்கள் இல்லை? இந்த நிலைமை ஆபத்தானது,இன்று மாலைக்குள் விசாரித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Next Story

