உடல் உழைப்போர் மற்றும் கட்டுமான அமைப்புசாரா அண்ணா பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது*

X
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு உடல் உழைப்போர் மற்றும் கட்டுமான அமைப்புசாரா அண்ணா பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் உடல் உழைப்போர் மற்றும் கட்டுமான அமைப்புசாரா அண்ணா பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நகர அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு டாக்டர் எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ரத்ததான முகாமை அதிமுக நகர செயலாளர் சோலை சேதுபதி துவக்கி வைத்தார். இந்த முகாமில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்ததானம் அளித்தனர். மருத்துவமனை பணியாளர்கள் தானமாக அளித்த ரத்தத்தை முறையாக சேமித்தனர். இந்த முகாமில் அரசு மருத்துவமனை பணியாளர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

