ராமநாதபுரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
X
மத்திய அரசை கண்டித்து அரண்மனை முன்புமாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் அரண்மனை முன்பு காங்கிரஸ் கட்சியின் மாநிலதலைவர் செல்வபெருந்தகை ஆணைக்கிணங்க பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.இதில் இந்தியர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் பணியாற்றி குடியேறினார்கள் என்ற அடிப்படையில் அமெரிக்க அதிபர் டொனால்ட்ரம் தலைமையிலான அமெரிக்க அரசு இந்தியர்களை கை, கால்களில் விளங்கிட்டு கொத்தடிமைகளாக பலமணி நேரம் ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தை மத்திய அரசு தடுக்க தவறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இவர்களை அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக அனுப்பிய ஏஜென்டுகளை கண்காணிக்கத்தவரிய பாஜக அரசை கண்டித்தும் ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினரும் நகர்மன்ற உறுப்பினருமான ராஜாராம் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேசிய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னான்டோ, முன்னால் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் மாவீரன் வேலுச்சாமி மாநில மகிளா காங்கிரஸ் உறுப்பினர் ராமலட்சுமி, நகர் தலைவர் கோபி, மாநில செயலாளர் செல்வக்குமார், வட்டார தலைவர் காருகுடிசேகர், முன்னாள் ராணுவ அணி கோபால், திருப்புல்லாணி வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சேதுபாண்டி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற ஆர்பாட்டம் நடைபெற்றது.
Next Story