ஏஐடியுசி மாநில செயலாளர் சந்திரகுமார் செய்தியாளர் சந்திப்பு.

X
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அனைத்து தொழிலாளர்களின் கூட்டமைப்பு சார்பில் ஏ ஐ டி யு சி மாநில செயலாளர் சந்திரகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 25 லட்சம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாததால் நெல்லின் ஈரப்பதம் குறைந்த எடை இழப்பு ஏற்படுகிறது எடை இழப்பு ஏற்பட்ட நெல்லுக்கான பணத்தை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றன. எடை இழப்புக்கான பணத்தை கட்டினால் மட்டுமே மீண்டும் வேலை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவிப்பதால் கொள்முதல் நிலையங்களில் பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 12-தேதி திருவாரூர் மாவட்ட முழுவதும் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் காலவரையற்று இயங்காது என ஏ ஐ டி யு சி யின் மாநிலச் செயலாளர் சந்திரகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Next Story

