மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

X
வெள்ளகோவிலில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் ஜே. வசந்தகுமார் தலைமை தாங்கினார். முகாமில் 89 குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு அடையாள அட்டைகள், உதவி உபகரணங்கள், மருந்துகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியை, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முகாமுக்கு மேட்டுப்பாளையம். வாய்க்கால் மேட்டு புதூரை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் சோபியா தனது பெற்றோருடன் வந்திருந்தார். மாணவியின் தாயார் கூறும்போது " எனது மகளுக்கு 3 வயதில் இருந்தே கழுத்து சரியாக நிற்காமல் நடக்க முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தாள். நான் முகாமிற்கு அவளை தூக்கிக் கொண்டு வருவேன். முகாமுக்கு வந்து பயிற்சிகள் செய்த பிறகு எனது மகளுக்கு பரவாயில்லை” என்றார்.
Next Story

