டிராக்டர் மோதி விபத்து விரிவுரையாளர் பலி

X
விழுப்புரம் அடுத்த கருங்காலிப்பட்டு கிராமத் தைச் சேர்ந்தவர் விஜய குமார், 40; திருவெண்ணெய் நல்லுார் அரசு கலைக் கல்லுாரியில் விலங்கியல் துறையில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.இவர், நேற்று காணையில் இருந்து கருங்காலிப்பட்டு கிராமத்திற்கு பைக்கில் சென்றார். காணை அழகம்மாள் கோவில் அருகே சென்றபோது, டிப்பருடன் கூடிய டிராக்டரில் சிக்கி படுகாயமடைந்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் விஜயகுமார் இறந்தார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

