உழவர் சந்தை சாலையில் போக்குவரத்து பாதிப்பு

X

பாதிப்பு
கள்ளக்குறிச்சி உழவர் சந்தை சாலையில் ஆக்ரமிப்புகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி, சுந்தரவிநாயகர் கோவில் தெருவில், உழவர் சந்தை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும், காய்கறி மற்றும் பல்பொருட்கள் கடைகள், நடமாடும் விற்பனை வாகனங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.மேலும், வணிக நிறுவனத்தினர் இந்த சாலையில் வரிசையாக தடுப்புகள் ஏற்படுத்தி, முழுமையாக ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்த சாலையில் ஆம்புலன்ஸ்கள், பள்ளி வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இதனால் நோயாளிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story