பயணியர் நிழற்குடை இல்லாத திருமுக்கூடல் கூட்டுச்சாலை

பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், வெயில் மற்றும் மழை நேரங்களில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் அடுத்து பழையசீவரம் பாலாற்று பாலம் வழியாக, திருமுக்கூடல் செல்லும் சாலை உள்ளது. பழையசீவரம் பாலாற்று பாலம் துவக்கத்தில், திருமுக்கூடல் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தம் உள்ளது.திருமுக்கூடல் சுற்றியுள்ள புல்லம்பாக்கம், வயலக்காவூர், அருங்குன்றம், பட்டா, சிறுதாமூர், சிறுமையிலுார், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.மேலும், திருமுக்கூடல் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், இந்த நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், வெயில் மற்றும் மழை நேரங்களில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, திருமுக்கூடல் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story