திருச்செங்கோடு பகுதிகளில் நிலா பிள்ளையார் கொண்டாட்டம்

திருச்செங்கோடு பகுதிகளில் நிலா பிள்ளையார் கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதிகளில் நிலா பிள்ளையார் கொண்டாட்ம் ஆண்டுதோறும் தைப்பூசத்திற்கு ஐந்து நாட்கள் முன்னதாக நிலா பிள்ளையார் வழிபாடு துவங்கப்படுவது வழக்கம் முழுமுதற் கடவுளான விநாயகருக்கு நன்றி செலுத்தும் விதமாக நிலா பிள்ளையார் வழிபாடு என்ற கும்மியடிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி கொங்கு மண்டல பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம் பாளையம் கொள்ளுமேடு கஜசீர கணபதி கோவில் பகுதியில் நடைபெற்றது. இதற்காக 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த பகுதியில் இரவு 8 மணி அளவில் ஒன்று கூடினார்கள். பின்னர் திருமஞ்சனத்தில் விநாயகர் உருவத்தை பிடித்தனர். அதன்பின்னர் அவரவர்கள் வீட்டில் சமைத்த உணவு, பழம், தேங்காயுடன் சர்க்கரை பாகு கலந்து மாவிளக்கையும், ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களையும் விநாயகர் முன்பு வைத்து படைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து நிலாவை விநாயகராக பாவித்து அதை பூமிக்கு அழைக்கும் விதமாக பெண்கள் வட்டமாக நின்று ஆடி, பாடி கும்மியடித்தார்கள். அப்போது அனைத்து நிலைகளிலும் இயற்கை மக்களுக்கு சாதகமான ஒரு நிலையை கொண்டு வர வேண்டும் என வேண்டிக்கொண்டனர். கிராமப்புறங்களில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த நிலா பிள்ளையார் நிகழ்ச்சி தற்போது திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் சமீபகாலமாக அதிக இடங்களில் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலா பிள்ளையார் கும்மியடிக்கும் நிகழ்ச்சியில் ஆண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கும்மி அடித்தனர்
Next Story