வருங்கால தலைவர். அவர்களே... ரோட்டரி விழாவில் நகராட்சி தலைவரை அசர வைத்த நிகழ்ச்சி தொகுப்பாளர்

வருங்கால தலைவர். அவர்களே... ரோட்டரி விழாவில் நகராட்சி தலைவரை அசர வைத்த நிகழ்ச்சி தொகுப்பாளர்
X
வருங்கால தலைவர் அவர்களே...என்று ரோட்டரி  விழாவில் நகராட்சி தலைவரை  நிகழ்ச்சி தொகுப்பாளர் அசர வைத்தார்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம், ரோட்டரி சங்கம் சார்பில் நவீன கழிப்பிடம் திறப்பு விழா நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் தி.மு.க. மாவட்ட செயலர் மதுரா செந்தில், ரோட்டரி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். ரோட்டரி சங்க நிர்வாகி ஒருவர் நிகல்சியிஐ தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். அப்போது நகராட்சி துணை தலைவர் வெங்கடேசனை அறிமுகப்படுத்தும் போது, தற்போதைய துணை தலைவரே, வருங்கால தலைவரே என்று கூறினார். அப்போது அருகே உட்கார்ந்து இருந்த நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தனக்கு அது போல் ஆசை கொஞ்சமும் இல்லை என்று சமாளித்தார். நிகழ்ச்சியை தொகுத்து வளங்கியவர், நான் சொன்ன தலைவர் ரோட்டரி சங்க தலைவர் என்று தான் சொன்னேன். என்று அவரும் சமாளித்தார். மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில் ஆச்சர்யம் அடைந்து, பின்னர் சிரித்தார். வருங்கால தலைவர் வெங்கடேசன் என்றதும், நகராட்சி தலைவர் ஆதரவாளர்கள் வெளியில் நின்று இருந்தவர்கள், உள்ளே வந்தனர். சிறிது நேரத்தில் களம் பரபரப்பானது.
Next Story