அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா
X
குமாரபாளையம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே  குள்ள நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜா தலைமையில் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன,  சிறப்பு விருந்தினராக குப்பாண்டபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர்  கவிதா வேலுமணி,  ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் சுந்தரராஜ், குள்ளநாயக்கன் பாளையம் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கண்ணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சக்திவேல், மற்றும் உறுப்பினர்கள் துரைமுருகன், நல்லசாமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்    உள்ளிட்ட  பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story