சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த
X
பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி
நாகை மாவட்டம் நாகூர் கிரசென்ட் மேல்நிலைப் பள்ளியில், மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம் துறையின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பேச்சுப் போட்டி நடைபெற்றது. சுற்றுச்சூழல் கல்வி திட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் என்ற தலைப்பில் 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், கிரசன்ட் மெட்ரிக் பள்ளி முதல்வர் ரபியதுல் பஜ்ரியா, பள்ளித் துணை ஆய்வாளர் ராமநாதன், தேசிய பசுமை படை ஆசிரியை மாலதி ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிகளுக்கு நடுவர்களாக, ஆசிரியைகள் ரம்யா, பிரியா, ரூபன்சியா, அன்னலட்சுமி ஆகியோர் செயல்பட்டனர். முடிவில், 65 தேசிய பசுமைப்படை பள்ளிகளுக்கு இந்த நிதியாண்டுக்கான தலா ரூ.2,500- கான காசோலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் செய்திருந்தார்.
Next Story