வாணியம்பாடியில் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த பெண் கைது..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த பெண் கைது.. வாணியம்பாடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி நகர காவல்துறையினர் நடவடிக்கை.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியில் சந்திரா (55) என்பவர் டிப்ளோமா நர்ஸிங் மட்டுமே படித்துவிட்டு பொதுமக்களுக்கு தனது வீட்டில் பல்வேறு வகையான பொதுமருத்துவம் பார்த்து வருவதாக வாணியம்பாடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர், சிவசுப்பிரமணி, என்பவர் சந்திரா மீது வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தின் பேரில், சந்திராவை வாணியம்பாடி நகர காவல்துறையினர் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..
Next Story



