நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்

X
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கார்ப்ரேட்டுகளும், தனியார் பெருநிறுவனங்களும் நெல் கொள்முதல் செய்வதற்கு அனுமதித்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கைவிடும் அரசாணையை கண்டித்தும் இந்த முடிவை ஒன்றிய அரசு கைவிட கோரியும் நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணைய மூலம் நெல் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க விருதுநகர் தாலுகா செயலாளர் பெருமாள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்
Next Story

