விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்*

X
விருதுநகர் தேசபந்து மைதானத்தில், தமிழகத்தை புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் 2025 பட்ஜெட் நகலலை எரிக்க முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். தமிழகத்தை புறக்கணித்தும், தொடர்ந்து தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கும் ஒன்றிய மோடி அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்திருந்தனர். விருதுநகரில் இந்த பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் தேசபந்து மைதானத்தில் நடைபெற்றது. மீனாம்பிகை பங்களா அருகில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக பேரணியாக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தேசபந்து மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் பட்ஜெட் நகலை எரிக்க முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்து பட்ஜெட் நகலை பறித்தனர். அதன் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலைந்து சென்றனர்.
Next Story

