ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்விக் குழுமத்தின் மற்றும் ஒரு அங்கமாக பிஎம் பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் மூன்றாமாண்டு ஆண்டு விழா

ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்விக் குழுமத்தின் மற்றும் ஒரு அங்கமாக பிஎம் பப்ளிக்  (சிபிஎஸ்இ) பள்ளியில் மூன்றாமாண்டு ஆண்டு விழா
X
ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்வி குழுமத்தின் மற்றும் ஒரு அங்கமாக பி.எம்.பப்ளிக் ஸ்கூல் சிபிஎஸ்சி பள்ளியின் மூன்றாம் ஆண்டு ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அரியலூர், பிப்.8- ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்விக் குழுமத்தின் மற்றுமொரு அங்கமான பி.எம்.பப்ளிக் சிபிஎஸ்சிஇ  பள்ளியில் ஆண்டு விழா  நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விருத்தாச்சலம் ரோடு மகிமைபுரம் பல்கலை நகரில் அமைந்துள்ள மாடர்ன் கல்விக் குழுமம் பி.எம் பப்ளிக் சிபிஎஸ்சிஇ பள்ளியில் 3-ஆம் ஆண்டு, ஆண்டு விழா. கலை நிகழ்ச்சி விளையாட்டுப் போட்டிகளுடன் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாடர்ன் கல்விக்குழுமத்தின் தலைவர் சொ.பழனிவேல் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி முதல்வர் அருளா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக திருச்சி காவேரி காலேஜ் கல்லூரி துணை பேராசிரியரும், ஊக்க பேச்சாளருமான சாத்தம்மைபிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், பாரட்டு சான்றிதழும் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சிக்கு மார்டன் கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் எம்.கே.ஆர்.சுரேஷ், செயலாளர் மகேஸ்வரி பழனிவேல், நிர்வாக இயக்குனர் இலக்கியா சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். ஆண்டு விழா போட்டியில் பரதநாட்டியம், கிராமிய கலை நடனம், நாடகம் போன்ற  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பி எம் பப்ளிக் ஸ்கூல் ஆசிரியர் ராஜேஸ்வரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் சுமார் 1000 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும். பெற்றோர்களும் என பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.முடிவில் பி எம் பப்ளிக் சிபிஎஸ்சிஇ பள்ளி ஆசிரியர் மணிமொழி நன்றி கூறினார்.
Next Story