நெல்அறுவடை எந்திரம் மோதி வாலிபர் பலி

X
திருச்சி வரகனேரி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அப்துல் அகமத் (வயது 25). இவர் கடந்த 6 ந்தேதி இரவு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீர்புரம் சாலையில் தனியார் குடோன் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த நெல் அறுவடை எந்திரத்துடன் கூடிய வாகனம் அப் துல் அகமத் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவராமன் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story

