இலையூர் வானவில் மன்றம் சார்பில் அறிவியல் திருவிழா.

இலையூர் வானவில் மன்றம் சார்பில் அறிவியல் திருவிழா.
X
இலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் சார்பில் அறிவியல் திருவிழா நடைபெற்றது.
அரியலூர், பிப்.8- தமிழக முதல்வரின் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு திட்டமான வானவில் மன்றம் திட்டத்தின் மூலம் கிராம அறிவியல் திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆண்டிமடம் ஒன்றியம் இலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.சொ.க. கண்ணன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியை பள்ளியின் சார்பில் அனைவரையும் வரவேற்று பேசினார். வானவில் மன்றம் திட்டத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் அருண்கார்த்திக் திட்டம் குறித்து விலக்கி பேசினார். பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட துணை ஆய்வாளர் செல்வகுமார் வானவில் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும் பள்ளிகளில் செயல்படும் அனைத்து மற்ற செயல்பாடுகளின் மூலம் மாணவர்கள் தங்களது தனித் திறனை வெளிப்படுத்தும் விதம் குறித்தும் விலக்கி பேசினார். பள்ளி தலைமையாசிரியர் ராமச்சந்திரன், வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன், கிராம முக்கியஸ்தர் அறிவழகன் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வானவில் மன்றம் மூலம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் அறிவியல் கணித வகுப்புகள் குறித்து விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு விளக்கி பேசப்பட்டது. மாணவர்கள் வானவில் மன்றம் வகுப்பு மூலம் தெரிந்து கொண்ட பல்வேறு செயல் விளக்கங்களை விழாவில் செய்து காட்டி பெற்றோர்களை ஆச்சரியத்தில் வாழ்த்தினர். மந்திரமா தந்திரமா, பிள்ளைகள் விளையாட்டு, பெற்றோர்களுக்கான விளையாட்டு உள்ளிட மாணவ மாணவிகளையும் பெற்றோர்களையும் இணைக்கும் வகையிலான பல்வேறு விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. பள்ளியின் சார்பில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் நன்றி தெரிவித்து பேசினார். நிகழ்ச்சியில் 6,7,8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
Next Story