சோமரசம்பேட்டையில் புதிய தார் சாலை
சோமரசம்பேட்டையில் இருந்து வடகாபுத்தூர், கீழவயலூர், எட்டுமாந் துட்டல் வழியாக பாப்பாகுறிச்சி வரை செல்லும் சாலை குண்டும், குழி யுமாக மிகவும் மோசமாக காணப்பட்டது. இதனை சீரமைக்க அப்பகுதி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பழனியாண்டி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சாலையை சீரமைக்க ரூ134.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இதற்கான பணியை பழனியாண்டி எம்.எல்.ஏ. பூமி பூஜையுடன் தொடங்கி வைத் தார். நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகி கொடியரசு, சோமரசம்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம், ஊராட்சி செயலாளர் ஆரோக்கியராஜ் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story



