டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி
டெல்லி சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றுகிறது. இதனை கொண்டாடும் வகையில், நாகை புதிய பேருந்து நிலையத்தில், நேற்று மாவட்ட தலைவர் விஜயேந்திரன் தலைமையில் பாஜகவினர் வெடிவெடித்து கொண்டாடினர். பின்னர், பயணிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.
Next Story



