ராஜராஜேஸ்வரி அம்பிகா சமேத ராஜராஜேஸ்வரர் சாமி கோவில்

ராஜராஜேஸ்வரி அம்பிகா சமேத ராஜராஜேஸ்வரர் சாமி கோவில்
X
சம்வத்ஷரா சிறப்பு பூஜைகள்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பிள்ளை பனங்குடி கிராமத்தில், ராஜராஜேஸ்வரி அம்பிகா சமேத ராஜராஜேஸ்வரர் சாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோயில், குடமுழுக்கு முடிந்து 8 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், சம்வத்ஷரா சிறப்பு பூஜைகள், 7-ம் தேதி அனுக்ஞை, விக்னேஷ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, யாகபூஜை, திருவிளக்கு பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, நேற்று காலை முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசை புறப்பாட்டை தொடர்ந்து, ராஜராஜேஸ்வரி அம்பிகா, ராஜராஜேஸ்வரர் சுவாமிகளுக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, ஈசன் மற்றும் அம்பிகாவிற்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில், பனங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கிராம மக்கள் செய்திருந்தனர்.
Next Story