ஒன்றிய அரசை கண்டித்து விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..
திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தனியாருக்கு நெல் கொள்முதல் நிலையங்களை தாரை பார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தனியாருக்கு மாற்றினால் மத்திய அரசு வழங்கும் ஊக்கத்தொகை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் பாதிக்கப்படும் எனவே மாநில அரசு கொள்முதல் உத்தரவை கைவிட வேண்டும். நேரடி நெல் கொள்முதல் மூலம் அரசின் சலுகைகளை தனியாருக்கு சாரை வார்த்து விவசாயிகளின் சலுகைகளை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.சேகர், மாநில குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், தமிழ்ச்செல்வி, மற்றும் விவசாய சங்க அனைத்து கிளைச் செயலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஒன்றிய அரசு உடனடியாக இம்ம முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
Next Story



