கர்ஷினி சுவாமி காஞ்சிபுரம் வருகை

X

காஞ்சிபுரம் வந்த சுவாமிஜிக்கு வரவேற்பு குழு சார்பில் சிறப்பான வரவேற்பு
காஞ்சிபுரத்தில் பழமையான உதாசின் பாவாஜி மடம் உள்ளது. காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு திருவண்ணாமலை, மணிமங்கலம், ராணிப்பேட்டை, ராமேஸ்வரம், திருப்பதி, சித்துார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிளைகள் செயல்பட்டு வேத பாடசாலை மற்றும் ஆன்மிகம் சார்ந்த நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.மடத்தின் மடாதிபதியாக கர்ஷினி அனுபவானந் சுவாமிஜி இருந்து வருகிறார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிப்.,1 தேதி நடந்த கும்பமேளா நிகழ்வில், கர்ஷினி அனுபவானந் சுவாமிஜிக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று காஞ்சிபுரம் வந்த சுவாமிஜிக்கு வரவேற்பு குழு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Next Story