மத்திய பட்ஜெடை கண்டித்து திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

X
திருச்சி ஜங்ஷன் காதி கிராப்ட் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட செயலாளர் சிவா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாய விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை எதுவும் அறிவிக்கப்படவில்லை. பெட் ரோல், டீசல், கியாஸ் விலை குறைக்கப்படவில்லை, மருத்துவ உபகர ணங்கள், மருந்து பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட வில்லை. ஏழை, எளிய நடுத்தர மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன. இதில் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் ராமராஜ், விவசாய சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் சிவ.சூரியன், பகுதி குழு செயலாளர் சுரேஷ் முத்துச்சாமி, மற்றும் மாவட்ட குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

