கடன் பிரச்சினையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை

கடன் பிரச்சினையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
X
அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை விறகுகடை தெருவை சேர்ந்தவர் முகமது பைசல் (35). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ரிஸ்வான் பர்வீன் (32). கடன் பிரச்சினை காரணமாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரிஸ்வான் பர்வீன் மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை கட்டுவதற்காக வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் முகமது பைசல் வீட்டில் இருந்த மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய ரிஸ்வான் பர்வீன் கணவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story