நெடுஞ்சாலை துறையில் வாகனங்கள் பராமரிப்பு நிதியை அதிகரிக்க ஓட்டுநர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல்

நெடுஞ்சாலை துறையில் வாகனங்கள் பராமரிப்பு நிதியை அதிகரிக்க ஓட்டுநர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல்
X
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் நெடுஞ்சாலை துறையில் வாகனங்கள் பராமரிப்பு நிதியை அதிகரிக்க வேண்டும் என ஓட்டுநர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்
சிவகங்கை நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகை வாளகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அதன் தலைவா் கோவிந்தசாமி தலைமை வகித்தாா். செயலா் மூா்த்தி, பொருளாளா் செந்தில்குமாா், பட்டயக் கணக்காளா் காமாட்சி, துணைச் செயலா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் 15 ஆண்டுகள் முடிவடைந்து கோட்ட அலுவலகங்களில் கனரக வாகனங்கள் பராமரிப்பின்றி, இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளதால், வேலையின்றி காத்திருக்கும் ஓட்டுநா்களுக்கு பணி வாய்ப்பளிக்கும் வகையில், புதிய வாகனங்களைக் கொள்முதல் செய்ய வேண்டும், ஆண்டுதோறும் ஓட்டுநா்களுக்கு 3 'செட்' சீருடை, காலணி, காலுறைகள் போன்ற உபகரணங்களை தடையின்றி வழங்க வேண்டும். வாகன பராமரிப்புக்கு நிதி குறைவாக உள்ளதால், வரும் காலங்களில் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும், பதவி உயா்வு மூலம் வட்டங்களுக்கு உள்பட்ட வெவ்வேறு கோட்டங்களில் வருடக்கணக்கில் பணிபுரிந்து வரும் ஓட்டுநா்களுக்கு, அவா்களின் விருப்பத்தின் அடிப்படையில் சொந்த மாவட்டங்களுக்கு உள்பட்ட கோட்டங்களில் பணி மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், அகில இந்திய அரசுத் துறை ஓட்டுனா்கள் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினா், மாநிலத் தலைவா் பெங்கியண்ணன், அகில இந்திய அரசுத் துறை ஓட்டுநா்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவரும், மாநில பொதுச் செயலருமான குமாா், பொருளாளா் ஈஸ்வரன் ஆகியோா் விளக்கவுரையாற்றினார்கள் துணைத் தலைவா் ராஜன், துணைச்செயலா் சுந்தரபாண்டி, தணிக்கையாளா் செல்வராஜ், நிா்வாகக் குழு உறுப்பினா் கணபதி சுப்பிரமணியம், செயற்குழு உறுப்பினா் ஜீவா, முன்னாள் மாநிலப் பொருளாளா் முருகேசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினார்கள். முன்னதாக, மண்டல நிா்வாக குழு உறுப்பினா் கிட்டு வரவேற்றாா். துணைத் தலைவா் பழனிவேல்ராஜன் நன்றி கூறினாா். மதுரை, தேனி, திண்டுக்கல், பழனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
Next Story