போதை பொருட்கள் தொடர்பாக புகார்

X

புகார்
கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் மது, போதை பொருட் கள் குறித்த புகார் தெரிவிக்க 'வாட்ஸ் ஆப்' எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: தமிழக அரசு 'போதை பொருள் இல்லா தமிழ்நாடு' எனும், திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.அதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 11ம் தேதி 'ட்ரக் ப்ரீ தமிழ்நாடு' என்ற மொபைல் செயலியை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மது மற்றும் போதை பொருட்கள் தொடர்பான புகாரை, 90800 34763 என்ற வாட்ஸ் ஆப்எண் மூலம் தெரிவிக்கலாம். இதேபோன்று மாநில அளவில் புகார் அளிப்பதற்காக, 10581 என்ற கட்டணம் இல்லா உதவி எண் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story