ஊரை சூழ்ந்த பனி மூட்டம்

X
Komarapalayam King 24x7 |9 Feb 2025 12:40 PM ISTகுமாரபாளையம் அருகே தட்டான்குட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பனி மூட்டம் அதிகம் காணப்பட்டது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் சில நாட்களாக அதிக குளிர் ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து, நேற்று காலை 08:00 மணி வரையிலும் தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் பகுதியில் பனி மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. எதிரில் வரும் நபர்கள், வாகனங்கள் கூட தெரியாத நிலையில் பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டது. சேலம் கோவை புறவழிச்சாலையில் வாகனங்கள் சிறிது நேரம் நின்று, மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. வாகனங்களில் முகப்பு விளக்குகளை போட்டவாறு வாகனங்கள் சென்றன. பொதுமக்கள் திரண்டு வீட்டுக்கு வெளியில் வந்து, பனி மூட்டத்தை கண்டு ரசித்தனர்.
Next Story
