ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

X
Komarapalayam King 24x7 |9 Feb 2025 12:45 PM ISTகுமாரபாளையத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலர் மதுரா செந்தில் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமை தேர்தல் பணிக்குழு செயலர் புகழேந்தி, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், மூத்த நிர்வாகிகள் மாணிக்கம், ராஜாராம், உள்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு அநீதி இழைத்ததாக அனைவரும் பேசினார்கள். மகளிரணியினர், இதர அணியினர், கூட்டணி கட்சியினர் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story
