புளியம்பட்டி பட்டாசு கடைகள் தீ விபத்து
புளியம்பட்டி பட்டாசு கடைகள் தீ விபத்து ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள புளியம்பட்டியில் கிருஷ்ணவேணி என்பவர் உரிமம் பெற்ற பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்த கடை புளியம்பட்டி - சத்தி ரோட்டில் தனியார் மருத்துவமனை அருகில் உள்ளது. இன்று அதிகாலை பட்டாசு கடையில் திடீரென தீ பிடித்தது. இதை கண்ட வாகன ஓட்டிகள் புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சத்தி தீயனைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கத்தில் இருந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். இதனால் பெரிய அளவிலான சேதாரம் தவிர்க்கப்பட்டது. புளியம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story



