இறைச்சி தர மறுத்ததால் மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை எடுத்து வந்து கடையின் முன்பு போட்டு சென்ற நபரால் பரபரப்பு
தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் மணியரசன் என்பவர் கறிக்கடையில் சுடுகாட்டில் பணி புரியும் குமார் என்பவர் இலவசமாக கறி கேட்டு மிரட்டியுள்ளார் கறி தர மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து கிளம்பிச் சென்ற குமார் சிறிது நேரம் கழித்து புதைக்கப்பட்ட சடலத்தை எடுத்து வந்து கடையின் முன்பு போட்டுச் சென்று தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது பழனிசெட்டிபட்டி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி இது யாருடைய சடலம் எங்கிருந்து எடுத்துவரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.
Next Story



