டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றியை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் விருதுநகரில் பாஜகவினர் கொண்டாட்டம்...*

X
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றியை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் விருதுநகரில் பாஜகவினர் கொண்டாட்டம்... டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு என்னும் பணி இன்று காலை துவங்கியது தொடக்கத்தில் இருந்தே தற்போதைய ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை விட பாஜக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வரான அரவிந்த் கஜ்ரிவால் பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவியுள்ளார். இந்த நிலையில் டெல்லியில் மீண்டும் பாஜக ஆட்சி 27 ஆண்டுகளுக்கு பின்பு அமைந்து உள்ளது இந்த வெற்றியை தமிழக முழுவதும் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய நிலையில், விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் தேவர் சிலை முன்பு பாஜகவின் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் மண்டலத் தலைவர் ஜி.முனியசாமி முன்னிலையில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பாஜகவின் வெற்றியை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் பிரச்சாரப் பிரிவு மாவட்ட தலைவர் காமாட்சி முன்னாள் நகரத் தலைவர் மணிராஜ், ஒன்றிய தலைவர் ராமதாஸ் முன்னாள் நகர தலைவர் நாகராஜ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story

