அரசு கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Komarapalayam King 24x7 |9 Feb 2025 5:35 PM ISTகுமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. மாணவ, மாணவியர் இந்த கல்லூரியில் பயின்ற போது நடந்த சம்பவங்களை நினைவுப்படுத்தி பேசினார்கள். அரசு கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உதவிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்கள். பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருவது குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கடும் முயற்சியின் பல வெற்றிதான் என்று தற்போதைய மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைத்தனர். முன்னாள் மாணாக்கர் சங்க செயலர் பேராசிரியை பத்மாவதி, பொருளர் ராமகிருஷ்ணன், துணை தலைவர்கள் பேராசிரியர்கள் ஞானதீபன், சிவகுமார் உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.
Next Story


