அரசு இ - சேவை மையம் திறப்பு
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு இ - சேவை மையத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் - மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா.எம்.பி. ஆகியோர் திறந்து வைத்து, இணைய வழி சான்றுகளை பயனாளிக்கு வழங்கினார்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு இ - சேவை மைய கட்டிடத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி சிவசங்கர், மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா.எம்.பி., ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்தனர். முன்னதாக அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அரசு இ - சேவை மைய செயல்பாட்டினை போக்குவரத்துத்துறை அமைச்சர், மேனாள் ஒன்றிய அமைச்சர் இருவரும் பார்வையிட்டு, இணைய வழி சான்றினை பயனாளிக்கு வழங்கினார்கள். அரசின் சேவைகள் எளிதாகவும்,விரைவாகவும் கிடைத்திடும் வகையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக அரசு இ - -சேவை மையங்களை நடத்திவருகிறது. இச்சேவையினை பொதுமக்களுக்கு எளிதில் கிடைத்திடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 234 - சட்டப்பேரவை உறுப்பினர்களின் அலுவலகங்களிலும் இ-சேவைமையங்கள் அமைத்திடவும், அம்மையங்களுக்கான நவீன மேசைகணினிகள் வழங்கி தொடங்கி வைத்துள்ளார்கள்.அதன் அடிப்படையில் பெரம்பலூர் சட்டமன்ற அலுவலகம் அருகில் பெரம்பலூர்சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில்புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு இ சேவை மைய கட்டிடத்தை மாண்புமிகுபோக்குவரத்து துறை அமைச்சர் அவர்களும்,நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும்,இன்று திறந்து வைத்து அரசு இ - சேவை மையத்தின் மூலமாகஇலவசமாக இணைய வழி சான்றினை பயனாளிக்கு வழங்கினார்கள். இந்த இ-சேவைமையத்தில் சிறு, குறு விவசாயி சான்றிதழ், ஓய்வூதியத்திட்டம், விதவைச் சான்று, சாதிச்சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் வருவாய்த்துறையின் சான்றிதழ்கள், சமூக நலத்துறையின் திருமண நிதியுதவி திட்டம், இணைய வழி பட்டா மாறுதல், முதல் தலைமுறை பட்டதாரிக்கான சான்றிதழ்கள், கலப்புத்திருமண சான்றிதழ்கள், சொத்து மதிப்பு சான்றிதழ்கள், இரண்டுபெண் குழந்தைகளுக்கான சான்றிதழ்கள் உள்பட அனைத்து திட்டங்களுக்கும் இணையவழி சான்றுகளை இலவசமாக பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ராஜ்குமார், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story




