எலச்சிபாளையம் ஒன்றியத்தில் அரசு கலைக் கல்லூரி துவங்க வேண்டும் எலச்சிபாளையத்தில் கூடுதல் காவலர்கள் நியமிக்க வேண்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் தீர்மானம்

எலச்சிபாளையம் ஒன்றியத்தில் அரசு கலைக் கல்லூரி துவங்க வேண்டும் எலச்சிபாளையத்தில் கூடுதல் காவலர்கள் நியமிக்க வேண்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் தீர்மானம்
X
எலச்சிபாளையம் ஒன்றியத்தில் அரசு கலைக் கல்லூரி துவங்க வேண்டும் எலச்சிபாளையத்தில் கூடுதல் காவலர்கள் நியமிக்க வேண்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் தீர்மானம்
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. எலச்சிபாளையம் மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் அரசு கலைக் கல்லூரி துவங்க வேண்டும். பள்ளி நேரத்தில் செக்கரப்பட்டி பேருந்து நிலையத்தில் அனைத்து வாகனங்கள் நின்று செல்ல உத்தரவிட வேண்டும். அரசு காலி பணியிடங்கள் அனுப்ப வேண்டும். பெரியமணலி .வையப்பமலை. எலச்சிபாளையம் உள்ளிட்ட அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்த அனைவருக்கும் உடனடியாக புதிய ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும். எலச்சிப்பாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் கூடுதல் காவலர்கள் நியமிக்க வேண்டும். வையப்பமலையில் புறநகர் காவல் நிலையம் அமைத்திட வேண்டும். ஒன்றிய தலைவர் எஸ்.ராஜீ. தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய துணைத் தலைவர் பிரியா வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் மாவட்ட செயலாளர் சு.சுரேஷ் துவக்கி வைத்து பேசினார். புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணிகண்டன் நிறைவறையாட்டினர். முன்னாள் வாலிபர் சங்க பொருளாளர் ரமேஷ்.பெரியமணலி தலைவர் தேவராஜன். மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பழனியம்மாள் ஒன்றிய தலைவர் கவிதா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். ஒன்றிய தலைவராக பி.விஜய்.ஒன்றிய செயலாளர் து.பூபதிமுருகன் பொருளாளராக எம்.மோகனப்பிரியா. துணைத் தலைவராக மகேந்திரன்.துணை செயலாளராக யோகராஜ். மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் சந்துரு சபரி கீர்த்தனா கொரியா வித்யா சுரேந்திரன் பூமிநாதன். ஆகியோர் கிழக்கு ஒன்றியத்திற்கு தேர்வு செய்யப்பட்டது. மேற்கு ஒன்றியத்திற்கு தலைவராக ராஜி. செயலாளராக சிவா. பொருளாளராக மணிகண்டன். துணை தலைவர் துணைச் செயலாளர் பரணிதரன். கமிட்டி உறுப்பினர்கள் சந்தியா.பிரியா.மைவிழி. ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர் இறுதியாக சங்கத்தின் பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறி முடித்து வைத்தார்.
Next Story