கூட்டபள்ளி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வேண்டாம் என அப்பகுதி பொதுமக்கள் உண்ணாவிரதம்

கூட்டபள்ளி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வேண்டாம் என அப்பகுதி பொதுமக்கள் உண்ணாவிரதம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனியில் 4500 க்கும் மேற்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்கு 33 ஏக்கர் பரப்பளவில் கூட்டப் பள்ளி ஏரி இருந்தது. அது சுருங்கி தற்போது கழிவுநீர் ஓடையாக மாறிவிட்டது. இந்நிலையில் கூட்ட பள்ளி காலனி குடியிருப்பின் அருகே ஏரிக்கரை அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சுமார் 36 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனை அடுத்து கூட்டப்பள்ளி பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல் கட்டமாக திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் கட்டமாக வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்டமாக இன்று கூட்டப்பள்ளி பேருந்து நிறுத்தத்தின் அருகே கூட்ட பள்ளி காலனி அய்யகவுண்டன் பாளையம், கூட்டப்பள்ளி குடித்தெரு, நாச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து கூட்டபள்ளி மக்கள் நல இயக்கத்தின் தலைவர் பத்மநாபன் கூறும் போது நாங்கள் மூன்று கட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறோம். முதல் கட்டமாக ஆர்ப்பாட்டம், இரண்டாம் கட்டமாக கருப்பு கொடி கட்டுதல், ஆகிய போராட்டங்களை நடத்தினோம். இன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறோம். எங்கள் பகுதிக்கு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் தேவையில்லை. அதனை ஊருக்கு வெளியே யாருக்கும் தொல்லை இல்லாத இடத்தில் அமைக்க வேண்டும் என்று நகராட்சியை கேட்டுக் கொள்வதாக கூறினார். இவரை தொடர்ந்து பேசிய துளிரும் கூட்ட பள்ளி அமைப்பின் தலைவர் நாகராஜன் பேசும்போது கூட்டப்பள்ளி காலனியில் உள்ள ஏரி நீர் கழிவு நீர் போல மாறி வருகிறது இதனை தூர்வாரி நிலத்தடி நீர் செரிவூட்ட இந்த ஏரியை பயன்படுத்த வேண்டும். இந்த பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது. மேலும் திருச்சங்கோடு சுற்றி சுற்றுவட்டச் சாலை வருவதால் திருச்செங்கோட்டின் மையப் பகுதியாக கூட்டப்பள்ளி மாறி உள்ளது. எனவே ஊருக்கு வெளியே ஏதேனும் இடத்தில் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என நகராட்சியை கேட்டுக் கொள்வதாக கூறினார். இந்த போராட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், திராவிட முன்னேற்ற கழகம்,,தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி துளிரும் கூட்ட பள்ளி அமைப்பினர் நூறு பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தக்க தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் விரிவு படுத்தப் படும்தொடர்ந்து போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
Next Story