கொத்தடிமை தொழிலாளர்கள் விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு

X
பேராவூரணியில் பசுமை பூமி வேளாண் சமூக நல அறக்கட்டளை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு (பிப் 9) தினத்தை முன்னிட்டு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழக அரசின் தஞ்சாவூர் மாவட்ட கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்பு குழு உறுப்பினரும், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகத்தின் தலைவர் டாக்டர் ரவி, தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரவீந்திரன், அறக்கட்டளையின் நிர்வாக அலுவலர் சுஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ஜெயவர்த்தினி வரவேற்றார். இன்ஸ்பெக்டர் பசுபதி உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் மூத்த தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் காசாளர் பழனிவேல், நிர்வாக மேலாளர் ஸ்ரீஜாஜெனிபர், விற்பனை மேலாளர் நிகழ்குணால், மேலாளர் ராஜேஸ்வரி, தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். நர்சரி மேலாளர் ரஞ்சிதா நன்றி கூறினார்.
Next Story

