விவசாயிகள் சுய விவரங்களை விவசாயிகள் பெரும் பதிவேடு திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும் 

விவசாயிகள் சுய விவரங்களை விவசாயிகள் பெரும் பதிவேடு திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும் 
X
அரசு செய்திகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில், செயல்படுத்தப்படும் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த திட்டங்களில் பயன்பெறுவதற்கு விவசாயிகள் அவர்களின் சுய விவரங்களை "விவசாயிகள் பெரும் பதிவேடு" (FAREMRS REGISTRY) என்னும் புதிய திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "தஞ்சாவூர் மாவட்டத்தில் 893 வருவாய் கிராமங்களில் உள்ள 1.25,593 விவசாயிகள் பதிவு செய்யப்பட உள்ளனர். இந்த விவசாயிகள் பெரும் பதிவேடு வேளாண்மை துறை, தோட்டக்கலை கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவுத்துறை. உணவுத்துறை, பொதுப்பணித்துறை. வேளாண் வணிகத்துறை, ஆகிய துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களின் கீழ் விவசாயிகள் பயன்பெற இயலும். இப்பெரும் பணியினை ஒருங்கிணைந்து செயல்படுத்திட மகளிர் திட்டம், சமுதாய வள பயிற்றுநர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் மூலம் கிராமங்கள் தோறும் விவசாயிகள் பதிவு முகாம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த முகாமில் விவசாயிகள் பதிவு செய்து கொள்ள அவர்களின் ஆதார் நகல், நிலப்பட்டா நகல், ஆதார் உடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றுடன் வரவேண்டும்.  எனவே, விவசாயிகள் அவர்களின் நில உடைமைகளை சரிபாரத்திடவும், வேளாண்மை சார்ந்த நலத் திட்டங்களை பெற்றிடவும் தங்களின் கிராமங்களை தேடி வரும் பயன்படுத்திக் கொள்ளுமாறும்" மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்துள்ளார்.
Next Story