போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

திருச்செங்கோடுகே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு காவல்துறையும் இணைந்து நடத்தும் மாபெரும் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு காவல்துறையும் இணைந்து நடத்தும் மாபெரும் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதை மருந்து விழிப்புணர்வு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் பற்றி வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கே.எஸ்.ஆர் கல்விநிறுவனங்கள் சார்பில் மினிமராத்தான் போட்டிகள் இரண்டாம் ஆண்டாக நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் காலை 5.45 மணிக்கு 10 கிலோமீட்டர் ஓட்டத்தை முன்னாள் காவல் துறை தலைமை இயக்குனர் முனைவர் சைலேந்திர பாபு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் ஆகியோர் திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே துவக்கி வைத்தனர். இரண்டாவதாக காலை 6.00 மணிக்கு 5 கிலோமீட்டர் ஓட்டத்தை கூட்டப்பள்ளி, RTO அலுவலகம் அருகில் துவக்கி வைக்கப்பட்டது. மூன்றாவதாக காலை 7.00 மணிக்கு 2.5 மற்றும் 1 கிலோமீட்டர் ஓட்டம் கே.எஸ்.ஆர் கல்வி வளாகத்தில துவக்கி வைக்கப் பட்டது. இப்போட்டியில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக திருச்செங்கோடு எம். எல். ஏ ஈ. ஆர். ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினர் எஸ். எம். மதுரா செந்தில்நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ கே பி சின்ராஜ்கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் முன்னாள் காவல் துறை தலைமை இயக்குனர் முனைவர் சைலேந்திர பாபு ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்கள். இந்நிகழ்வை கே. எஸ். ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர். சீனிவாசன் மற்றும் துணைத் தாளாளர் சச்சின் சீனிவாசன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர். போட்டியாளர்கள் அதிகமாக இருந்ததால்,திருச்செங்கோடு ஈரோடு நான்கு வழிச்சாலையின் ஒரு பக்கம் முழுமையாக அடைக்கப் பட்டிருந்ததால் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story

