ஊழல் பட்டியலை கொடுக்கிறேன் என கூறி வெறும் ட்ரங்க் பெட்டியை ஆளுநரிடத்தில் கொடுத்தவர் தான் அண்ணாமலை பிஜேபி என்றாலே பொய்யர்களின் கூட்டம் போக்குவரத்து துறை அமைச்சர் குற்றச்சாட்டு

X
அரியலூர், பிப்.10- திமுகவை சேர்ந்தவர்கள் அதை செய்கிறார்கள் இதை செய்கிறார்கள் என ஊழல் பட்டியலை கொடுக்கிறேன் என்று கூறி வெறும் ட்ரங்க் பெட்டியை ஆளுநரிடத்தில் கொடுத்தவர் தான் அண்ணாமலை பிஜேபி என்றாலே பொய்யர்களின் கூட்டம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குற்றம் சாட்டினார் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நகர திமுக சார்பில் வஞ்சிக்கப்படுகிறது தமிழ்நாடு, உரிமையை கேட்போம் துணிவோடு என்பதன் கீழ் தமிழ் நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிராக திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது பொதுக் கூட்டத்தில் திமுக மாநில இலக்கிய அணி இணைச் செயலாளர் கவிதைபித்தன்,ஆதி திராவிடர் நலக்குழு இணைச் செயலாளரும் உன்னால் எம்எல்ஏவுமான விபி.ராஜன்,சட்டதிட்ட திருத்த குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணன், நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் பொதுக்கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசும்போது இன்றைக்கு மோடி அரசாங்கம் நம்முடைய வரிப்பணத்தை திருடிக் கொண்டு நமக்கு கொடுக்க வேண்டிய வரிப்பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி ஒரு ஆட்சியை மோடி நடத்திக் கொண்டிருக்கிறது தற்போது தமிழ்நாட்டின் மத கலவரத்தை உண்டாக்கும் வகையில் திருப்பரங்குன்றத்தை இந்து அமைப்புகள் கையில் எடுத்துள்ளது திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமிய பெருமக்கள் அங்கே காலம் காலமாக போய் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்த பக்கம் முருகனை வழிபடுகின்றனர் நம்முடைய தமிழ் மக்கள். இதுல எந்த பிரச்சினையும் கிடையாது இப்போ புதுசா அயோத்தியை பிரச்சனையைப் போன்று தமிழ்நாட்டில் கலவரத்தை உண்டாக்கலாம்னு நினைச்சு இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை தமிழர்கள் மத்தியிலே ஏற்படுத்தலாம் என்று நினைத்துக்கொண்டு அங்கே ஒரு பிரச்சனையை கிளப்பிப் பார்த்தார்கள் ஆனால் பொது மக்களிடத்திலே ஈடுபடவில்லை இன்றைக்கும் பல்வேறு கோயில்களுக்கு திருவிழா நடத்துகின்ற பொழுது அதற்கான ஒருநாள் பங்களிப்பை இஸ்லாமியர்கள் செய்வது பல கிராமங்களில் நடைபெற்று வருகிறது இது தந்தை பெரியாருடைய மண் பேரறிஞர் அண்ணாவால் பண்படுத்தப்பட்ட மண் தலைவர் கலைஞர் நம்முடைய திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஆட்சியிலே இந்த பதற்றத்தை ஏற்படுத்தி ஏதாவது செய்யலாம் என நினைக்கிறார்கள் மதுரைக்கு அறிவிச்ச எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தில் நிதி ஒதுக்கவில்லைஆனால் மதுரையில் மத கலவரத்தை உண்டு பண்ண இந்து அமைப்புகள் முயற்சி செய்கிறார்கள் திருப்பரங்குன்றம் பிரச்சனை வைத்து தனக்கு ஓட்டு வாங்கலாம் என்று சிந்தித்தால் இவர்களைவிட கடைந்தெடுத்த அயோக்கியர்கள் இருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார் பிஜேபி என்றாலே பொய்யர்களின் கூட்டம் தான். பிஜேபியின் மாநில தலைவர் ஊர் ஊரா நடை பயணம் போய் அங்க வந்து திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் அதை செய்கிறார்கள் இதை செய்கிறார்கள் என ஊழல் பட்டியலை கொடுக்கிறேன் என்று கூறி வெறும் ட்ரங்க் பெட்டியை ஆளுநரிடத்தில் கொடுத்தவர் தான் இவர். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்கிற பெயர் இல்லை தமிழ்நாட்டுக்கான திட்டம் இல்லை ஆனால் வருடா வருடம் நமக்கு கொடுக்க வேண்டிய பணம் இருபதாயிரம் கோடியை நமக்கு தராமல் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது மோடி. வரவேண்டிய 20,000 கோடி வந்தா எவ்வளவு திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியும் தமிழ்நாட்டில் இந்த பொருளாதார நெருக்கடியிலும் பல்வேறு திட்டங்கள் மெல்ல மெல்ல செய்து கொண்டிருக்கின்ற சூழல் இருக்கிறது அந்த திட்டங்களை எல்லாம் நாம் இன்னும் எளிதாக செய்துவிட்டால் நாம் தமிழ்நாட்டு மக்களிடத்தில் திமுகவை அசைக்க முடியாது எப்படியாவது பணத்தை நிறுத்தியாவது அவர்களுக்கு ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கிறான் ஆனால் நம்முடைய தளபதி அவர்கள் இருக்கிற பணத்தை வைத்துக்கொண்டு மக்களுக்கு எது தேவை எதை முன்னதாக செய்வது என்று பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் தான் இதற்கு பொதுமக்கள் நம்முடைய தலைவர் பக்கம் திரண்டு நிற்கிறார்கள் மற்ற மாநிலங்களில் நம்முடைய முதல்வர்வரை பின்பற்றுவது ஒரு பக்கம்னா உலக நாடுகளின் தலைவர்கள் நம்முடைய முதல்வருடைய திட்டத்தை பார்த்து பின்பற்றுகின்ற இன்றைக்கு ஒரு சிறப்பான ஆட்சி நம்முடைய முதல்வர் ஆட்சி இந்த மோடி மஸ்தான் கூட்டத்திற்கு இந்தியாவில் கொள்கை ரீதியாக தத்துவார்த்த ரீதியாக இருக்கின்ற ஒரே எதிர் கட்சி நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் தான். நம்முடைய முதல்வர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்கள் தான் எதிர்த்து நின்ற குரல் கொடுக்கின்ற ஒரே தலைவராக இருக்கிறார் எனவே ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பிஜேபியை எதிர்த்து குரல் கொடுக்கின்ற இயக்கம் நம்முடைய திராவிட முன்னேற்ற கழகம் எதிர்த்து குரல் கொடுக்கின்ற தலைவர் நம்முடைய தலைவர் தளபதிக்கு நாம் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும் பிஜேபிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்றோம் அதற்கு தலைவர் தலைமையில் நாம் அணி திரளுவோம் என்று பேசினார்.
Next Story

