சிப்காட் பணியை கைவிடாவிட்டால் மிகப்பெரிய போராட்டம்: அதிமுக

X
வெம்பூரில் விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைக்கும் பணியை கைவிடாவிட்டால் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டத்திற்குட்பட்ட வெம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, பட்டித்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி சுமார் 2700 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைக்க மும்முரமாக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், கிராம சபை கூட்டத்தில் இங்கு சிப்காட் அமைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியதோடு, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் தமிழ்நாடு அரசு விவசாய நிலங்களை அழிக்கும் இத்திட்டத்தை கைவிடாமல் விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல் தொடர்ந்து நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில், விளாத்திகுளம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மற்றும் அதிமுகவினர் இன்று வெம்பூர் கிராமத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள விவசாயிகளிடம் இப்பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளின் இந்த தொடர் போராட்டத்திற்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆதரவை தெரிவித்தனர்.
Next Story

