முதியோர், குழந்தைகள் மையங்களில் கலெக்டர் ஆய்வு

X
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், இருளப்பபுரத்தில் தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படும் அரசு உதவி பெறும் பால மந்தீர் குழந்தைகள் இல்லத்தையும் மற்றும் வெள்ளமடம் புனித ஜோசப் முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த காப்பகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.02.2025) நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில்:- குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் குழந்தைகளிடம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், இல்ல நிர்வாகத்தால் வழங்கப்படும் சேவைகள், மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் புனித ஜோசப் முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த காப்பகத்தில் 25 முதியோர் உள்ளார்கள். முதியோர்களிடம் அவர்களது உடல்நலம் குறித்தும், முதியோர்களின் குடும்ப சூழ்நிலை குறித்தும் கேட்டறியப்பட்டது. என கூறினார். நடைபெற்ற ஆய்வுகளில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, மாவட்ட சமூகநல அலுவலர் விஜயமீனா, துறை அலுவலர்கள், குழந்தைகள், முதியோர்கள், இல்ல பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story

