திருத்தணி முருகன் கோவிலில் வேதனையுடன் பக்தர்கள் குற்றச்சாட்டு
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய பொது விடுமுறை தினத்தில் குவிந்த பக்தர்கள் மலைக்கோவிலில் கடும் வாகன நெரிசல் ஏற்படுவதற்கு காரணமான ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வராத கோயில் நிர்வாகம் பக்தர்கள் வேதனையுடன் குற்றச்சாட்டு. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும் இந்த திருக்கோயிலில் சாமி தரிசனம் மலைக்கோவிலில் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா; போன்ற மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர் இன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினத்தில் சாமி தரிசனம் செய்ய அதிகளவு பக்தர்கள் மலைக்கோவிலில் திரண்டு உள்ளனர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பொது வழி மற்றும் ரூபாய் 100 ,கட்டண வழியில் சென்று மிக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் மலைக்கோவிலில் அதிகளவு பக்தர்கள் திரண்டு வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் மலைக்கோயில் அடிவாரம் முதல் மலைக்கோயில் வரை ஏற்பட்டுள்ளது மேலும் ஆட்டோக்கள் இவற்றினை இலவசமாக மலைக் கோயிலுக்கு இயக்கப்படுவதால் தாறுமாறாக எதிர் திசையில் ஆட்டோக்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது மேலும் அதிக கட்டணம் ஆட்டோக்கள் பக்தர்களிடத்தில் வசூலித்து வருகின்றனர் மேலும் கட்டணம் நிர்ணயம் மற்றும் ஆட்டோக்கள் அதிக ஒளி எழுப்பி அதிக பயணிகளை பக்தர்களை ஏற்றி கொண்டு வரும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை முன் வரவில்லை என்று பக்தர்கள் குற்றச்சாட்டு அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பு என்று பக்தர்கள் கேள்வி? எழுப்பி உள்ளனர் முருகன் கோயிலுக்கு மலைக்கோயில் முதல் ரயில் நிலையம் வரை இலவச பேருந்து சேவையை திருக்கோயில் நிர்வாகம் தமிழக அரசு பேருந்து மூலமாக செயல்படுத்தி வருகின்றனர் ஒரு பேருந்து மட்டுமே இயக்குவதால் அதிக பக்தர்கள் வர முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர் மேலும் ரயில் நிலையத்திலிருந்து மலைக் கோயிலுக்கு வரை இந்த பேருந்து இலவச பேருந்து என்று பெரிய அளவு பெயர் பலகையும் அந்த பேருந்தில் பின்பக்க பெயர் பலவையும் இல்லை என்பதால் வெளியூர் பக்தர்களுக்கு இது இலவச பேருந்து மலைக் கோயிலுக்கு செல்லும் பேருந்து என்று அடையாளம் தெரியாமல் ஏமாற்றம் அடைகின்றனர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கோயில் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று முருக பக்தர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர் வாரத்தில் கடைசி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் அதிக பக்தர்கள் சாமீ தரிசனத்திற்கு வருபவர்களுக்கு கூடுதல் பேருந்து வசதிகளை மலைக்கோயில் அடிவாரம் முதல் வரும் காலங்களில் ஏற்படுத்த வேண்டும் என்று முருக பக்தர்கள் இந்து சமய அறநிலைத்துறைக்கு கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
Next Story




