திருப்பூர் புதிய பேருந்து : அமைச்சர் துவக்கி வைத்தார்!

திருப்பூர் புதிய பேருந்து : அமைச்சர் துவக்கி வைத்தார்!
X
தூத்துக்குடி - திருப்பூர் வழித்தடத்தில் புதிய பேருந்தின் இயக்கத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் தூத்துக்குடி - திருப்பூர் வழித்தடத்தில் இயங்கும் புதிய பேருந்து சேவையை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், அரசு போக்குவரத்துக் கழக தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் பாலசுப்பிரமணியன், கிளை மேலாளர்கள் ரமேஷ்பாபு, கார்த்திக், தொமுச நிர்வாகிகள் சந்திரசேகர், கருப்பசாமி, சுப்பிரமணியன், நாகராஜ், லிங்கசாமி, மனோகரவேல், செண்பகராஜ் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாமன்ற உறுப்பினர் கீதா முருகேசன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், போல் பேட்டை பகுதி பொருளாளர் உலகநாதன், மாநகர மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பெல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story