வெள்ளூர் கருப்பசாமி கோவில் வருஷாபிஷேக விழா!

வெள்ளூர் கருப்பசாமி கோவில் வருஷாபிஷேக விழா!
X
ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர் அருள்மிகு இடையர் ஸ்ரீ கருப்பசாமி கோவில் வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர் அருள்மிகு இடையர் ஸ்ரீ கருப்பசாமி கோவில் வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர் அருள்மிகு இடையர் ஸ்ரீ கருப்பசாமி கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, புண்ணிய வாசனம் வேத பூஜை உடன் சிறப்பு வேள்வி பூஜையில் மகாபூரனாதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்கும்பம் எழுந்திருத்தல், பிரதான மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.  பிற்பகல் 12:30 மணிக்கு அலங்கார மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வருகின்ற 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் 12 மணிக்குள் கருப்பசாமி கோவில் கொடை விழாவிற்கான கால் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 18ஆம் தேதி கருப்பசாமி கோவில் கொடை விழா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளைகோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
Next Story