மீனாட்சியம்மாள் சமேத வெண்காட்டீஸ்வரர் மகா கும்பாபிஷேக விழா
மதுராந்தகத்தில் வரலாற்று சிறப்புமிகு 700 ஆண்டு பழமையான அருள்மிகு மீனாட்சியம்மாள் சமேத வெண்காட்டீஸ்வரர் மகா கும்பாபிஷேகம். செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகத்தில் எழுந்தருளி இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க 700 ஆண்டுகள் பழமையான அருள்மிகு மீனாட்சி அம்மாள் சமேத வெங்கடேஸ்வரர் திருக்கோவில்18 ஆண்டுகளுக்கு பிறகு இந்து அறநிலையத்துறை சார்பில் நன்கொடையாளர்கள் நிதி உதவியுடன் ரூபாய் 70 லட்சம் செலவில் கோவில் புனரமைக்கப்பட்டு விமர்சையாக கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கணபதி பூஜை, கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, பூர்ணாவதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது மங்கள வாத்தியம் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற யாகசாலை பூஜையில் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story



