காவேரிப்பாக்கம்: வீட்டுமனை தகராறில் ஒருவர் கைது

X
காவேரிப்பாக்கம் அடுத்த சங்கரன்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 70). இவரது உறவினர் மகன் கேசவன் (40). இவர்கள் இருவருக்கும் வீட்டு மனை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக அரக்கோணம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் கேசவன் கடந்த 7-ந் தேதி வீடு கட்டுவதற்காக பூமி பூஜை செய்துள்ளார். இதனைப்பார்த்த முருகன் பிரச்சினையில் உள்ள இடத்தில் எதற்கு பூமி பூஜை செய்கிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசம் அடைந்த கேசவன், முருகனை ஆபாசமாக பேசி, கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக முருகன் அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள் மொழி வழக்குப்பதிவு செய்து, கேசவனை கைது செய்து வாலாஜா கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story

